ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குத் தடை?

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் உட்பட 77 பேர் பொட்டியிடுகின்றனர்.

இதற்கான தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

பத்துக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் ்அங்கு முகாமிட்டு தேர்தல் பரப்புரை செய்துவருகின்றனர்.

அதிமுகவுக்கு முன்னாள் அமைச்சர்கள் பரப்புரை செய்துவருகின்றனர்.

நாம்தமிழர்கட்சி் சார்பாக சீமான் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே களநிலவரப்படி திமுக மாபெரும் வெற்றி பெறும் என்கிறார்கள்.

அதற்குக் காரணம் அக்கட்சி ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், அதிமுக படுதோல்வி அடையும் என்று சொல்லப்படுகிறது.

அக்கட்சிக்குள் நடக்கும் அதிகாரப்போட்டி காரணமாக குறைந்த ஓட்டு வாங்கினால் கட்சி கைவிட்டுப் போய்விடும் என்கிற நிலைமை.

இதனால் இடைத்தேர்தலை நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாம் அதிமுக.

அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்காய் புகார் தெரிவித்து வருகிறார்.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்காளர்களுக்குப் பணம், தேர்தல் விதிகளை மீறும் அமைச்சரகள் எனப் பலவேறு புகார்களைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

திமுகவின் பிரமாண்ட வெற்றி நிச்சயம் என்பதால் பாஜகவின் காலில் விழுந்து தேர்தலை நிறுத்திவிடலாம் என்பது அதிமுகவின் கணக்கு என்கிறார்கள்.

இதனால், அதிமுக சார்பில் ஓட்டுக்குப பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Response