பெ.மணியரசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில்

கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் பகுதியில் உள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் (TATA Electronics) தமிழர்களுக்கு வேலை தர மறுத்து இந்திக்காரர்களை ஆயிரக்கணக்கில் அழைத்து வந்து வேலையில் சேர்த்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்திக்காரர்களைப் பல்லாயிரக்கணக்கில் வேலையில் சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டில் தகுதியுள்ள பெண்களையும் ஆண்களையும் வேலையில் சேர்க்க டாட்டா நிறுவனம் மறுப்பது தமிழ் இன ஒதுக்கல் கொள்கையாகும்; சட்ட விரோதச் செயலாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டது.

இதற்கு இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்துள்லார்.

அவர் கூறியிருப்பதாவது….

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜிஏம்ஆர் தொழிற்பூங்காவில் 500 ஏக்கர் பரப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80% பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response