பின்வாங்கும் பேச்சே இல்லை – மூப்பில்லாத் தமிழே தாயே பாடல் வரிகள் மற்றும் காணொலி

நேற்று (24.3.2022) துபாயில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது ‘மூப்பில்லாத் தமிழே ! தாயே’ தனிப்பாடல் வெளியிடப் பட்டது.தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள “மூப்பில்லா தமிழே தாயே” பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதோடு, ஏ.ஆர்.அமீன், கதிஜா ரகுமான், சைந்தவி, அமீன ரபீக், பூவையார், கேப்ரியலா செல்லஸ் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பாடி நடித்துள்ளனர், அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

பாடல் வரிகள்:

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் !
பூபாளமே வா…
தமிழே வா வா…
தரணியாளத்
தமிழே வா..!
*
விழுந்தோம் முன்னம் நாம்…
எழுந்தோம் எப்போதும் !
பிரிந்தோம் முன்னம் நாம்…
இணைந்தோம் எப்போதும் !
*
திசையெட்டும் தமிழே எட்டும்…
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !
திசையெட்டும் தமிழே எட்டும்…
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !
*
அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் !
புறம் என்றால் போராய்ப்
பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
*
உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !
கொடைவள்ளல் எழுவர் வந்தார்…
கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்…
பலபாடம் கற்றுச் சென்றார் !
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !
*
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
*
உதிர்ந்தோம் முன்னம் நாம்…
மலர்ந்தோம் எப்போதும் !
கிடந்தோம் முன்னம் நாம்…
கிளைத்தோம் எப்போதும் !
தணிந்தோம் முன்னம் நாம்…
எரிந்தோம் எப்போதும் !
தொலைந்தோம் முன்னம் நாம்… பிணைந்தோம் எப்போதும் !
விழுந்தோம் முன்னம் நாம்…
எழுந்தோம் எப்போதும் !
*
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
*
தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !
காலங்கள் போகும்போது
மொழிசேர்ந்து முன்னால் போனால்… அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று…
வணிகத்தின் தமிழாய் ஒன்று…
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !
*
மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !
உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் !
உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை… முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்…
ஆடைகள் அணியும் புதிதாய் !
எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா..!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா வாவா…!
*
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
*
பழங்காலப் பெருமை பேசி…
படிதாண்டா வண்ணம் பூசி…
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..!
நீ சீறி வாவா வெளியே !
வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
‘செயல்’ என்றே
சொல்சொல் சொல்சொல்…!
சென்றிடுவோம் எட்டுத் திக்கும்…
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்…
இருக்கைகள்
தமிழுக்கமைப்போம்..!
ஊர்கூடித் தேரை இழுப்போம் !
*
மொழியில்லை என்றால் இங்கே…
இனமில்லை என்றே அறிவாய் ! விழித்துக்கொள் தமிழா முன்னே…!
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..!
தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று ! உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!…
*
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !
*
புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா…
தமிழே வா வா…
தரணியாளத்
தமிழே வா..!

பாடல் காண….

Leave a Response