ஒமிக்ரானுக்கு தடுப்பூசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகில் கொரொனா அச்சுறுத்தல் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வரும் நிலையில் புதிதாக ஒமிக்ரான் எனும் கிருமி தற்போது அச்சுறுத்த தொடங்கியுள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் ரஷ்ய சுகாதார‌த்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்…

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு ஏற்கெனவே பரவி விட்டது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதாரத்துறை, 
ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.  மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலகிலேயே முதன்முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரஷ்யாவில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response