கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவருகிறது ஒன்றிய அரசு.
நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.102.40க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.98.26க்கு விற்பனை ஆனது.
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது.
நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 15 ஆவது முறையாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்னால், மோடி அரசை மக்கள் கரித்துக்கொட்டுகின்றனர்.