வென்றது சென்னை – புதிய சாதனை படைத்த தோனி

ஐ.பி.எல் 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச மட்டைப்பந்து மைதானத்தில் நேற்றிரவு (அக்டோபர் 15,2021) நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதுவரை சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்யய்ஜ் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 32 ரன்களில்(3 பவுனரிகல், 1 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்து வந்த ராபின் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய டுபிளிசிஸ், 59 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 86 ரன்கள் குவித்தார். 20-வது ஓவரின் கடைசி பந்தில் சிவம் மாவி வீசிய பந்தில் டுபிளிசிஸ் கேட்ச் ஆனார். மொயீன் அலி(37 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்குச் சாதகமாக மாறியது.

கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா(0), சுனில் நரேன்(2), இயன் மார்கன்(4), தினேஷ் கார்த்திக்(9) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையில் ஐ.பி.எல். 2021 இறுதிப்போட்டியில் விளையாடியதின் மூலம் தோனி இருபது ஓவர் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் அணித்தலைவராகச் செயல்பட்ட முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 213 போட்டிகளில் அணித்தலைவராகச் செயல்பட்டுள்ளார். இதில் 130 வெற்றி மற்றும் 81 தேல்விகளும் அடங்கும். மேலும் இந்திய அணித்தலைவர் பொறுப்பிலிருந்து 41 வெற்றிகளை அவர் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response