மம்தா பானர்ஜி அமோக வெற்றி – பாஜக சோகம்

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்தச் சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டும்.

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

செப்டம்பர் 30 ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று அங்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 56,388 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ்ச் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதனால், பாஜகவினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

Leave a Response