மு.க.ஸ்டாலின் குறைத்தும் மோடியின் புண்ணியத்தால் ரூ 100 ஐத் தாண்டியது பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மூன்று ரூபாய் விலை குறைத்ததால் ரூ.102-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் வந்தது. டீசலும் அதே போல் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 80 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 2 காசுக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் முடிவால் குறைந்த பெட்ரோல், டீசல் விலை மோடியின் புண்ணியத்தால் தொடர்ந்து உயர்கிறதே என மக்கள் வருந்துகின்றனர்.

Leave a Response