3 மாதங்களில் மு.க.ஸ்டாலின் செய்ததை 7 ஆண்டுகளாகியும் மோடியால் செய்யமுடியவில்லை – மக்கள் விமர்சனம்

2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13 அன்று தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கை இது.

அதில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைத்து அறிவித்தார்,அதுதொடர்பாக அவர் கூறியதாவது….

தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசே பெருமளவு பயன்பெற்றதால், பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் அறிவித்த அன்றிரவே தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்குக் கீழ் சென்றது.

ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் பெட்ரோல் விலையை குறைப்பாக அளித்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றியுள்ளது.

அப்போதிருந்து ஆட்சிக்கு வந்து ஏழாண்டுகள் ஆகியும் மோடி அரசு இதுபோல் செய்யாமல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறதே? என்கிற விமர்சனங்கள் வந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்தாவது மோடி செய்வாரா? என்கிற கேள்விகளும் வந்துகொண்டிருந்தன.

இந்நிலையில்,மோடி அரசின் நிதியமைச்சஎ நிர்மலா சீதாராமன் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…..

எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்குத் தீர்வு இல்லை.

1.44 இலட்சம் கோடிக்கு எண்ணெய்ப் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரசு அரசு எரிபொருள் விலையைக் குறைத்தது. முந்தைய காங்கிரசு அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் & டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை.

காங்கிரசு அரசு வெளியிட்ட எண்ணெய்ப் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தி உள்ளது. 2020 க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் இப்படிக் கூறியதையொட்டி, ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் கடும் நிதிச்சுமை இருந்தும் மக்களின் வலிக்கு மருந்து போடும் விதமாக பெட்ரோல் விலையை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.ஆனால் ஆட்சிக்கு வந்து ஏழாண்டுகள் ஆகியும், கச்சா எண்ணெய்விலை குறைந்தும் விலையை ஏற்றிவிட்டு முந்தைய அரசின் மீது பழி போட்டு விலையைக் குறைக்கமுடியாது என்றும் சொல்கிறார்கள்.

இதன்மூலம் இவர்களுக்கு மக்கள் மீது அக்கறையும் இல்லை நிர்வாகமும் தெரியவில்லை என்பது புலனாகிறது என மக்கள் விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response