பெட்ரோல் தொடர் விலையேற்றம் – மக்கள் துயரம் எனக்கென்ன என்றிருக்கும் மோடி

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டுள்ளது. டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து இலிட்டர் 98.40 ரூபாய்க்கும் , டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து இலிட்டர் டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் ஒரு இலிட்டர் பெட்ரோல் விலை 25 காசு அதிகரித்து ரூ.98.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் 25 காசு அதிகரித்து ரூ.92.83க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா நெருக்கடியிலும் இதுபோன்ற தொடர் விலையேற்றம் மிகுந்த துயரத்தில் ஆழ்த்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், மோடி அரசாங்கம் மக்களின் துயரத்தைக் கணக்கில் கொள்ளாமல் தாம் நினைத்ததை மட்டுமே செய்துவருகிறது.

Leave a Response