3 வகையாக மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலின் இரண்டால் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் தொற்று பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போதைய நிலையில் நாளையுடன் (ஜூன் 21) ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்து போன்ற கூடுதல் தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொற்று பாதிப்பில் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வகை 1 எனவும்,

அரியலூர், கடலூர், சிவகங்கை, தேனி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி போன்ற 27 மாவட்டங்கள் வகை 2 எனவும்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வகை 3 எனவும் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளன.

இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகள் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை 2 என வகைப்படுத்தப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் வணிக சேவை நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய அரசுத் துறைகள் 100% ஊழியர்களுடனும், பிற அரசுத்துறைகள் 50% பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி.

சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி போன்ற தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வகை 3 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேநீர்க் கடைகள் மாலை 7 மணி வரை பார்சல் சேவையுடன் மட்டும் இயங்கலாம்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் நடத்த அனுமதி.

மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி
4 மாவட்டங்களுக்குள் 50% பயணிகளுடன் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி.

ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இ – பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி.

ஆகியன அறிவிக்கப்படுள்ளன.

Leave a Response