பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு நகரங்களில் இலிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி உள்ளது.
இதற்கு காங்கிரசு தலைவர் இராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘டிவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது….
பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு தொடங்கிவிட்டது. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது மோடி அரசால் பணவீக்கம் உயர்வதையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். வரி வசூல் தொற்று அலைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மிதமிஞ்சிய பகல் கொள்ளை. அதற்கு மோடி அரசே பொறுப்பு என்று காங்கிரசு தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.