தள்ளாடிக் கொண்டே வருவார் – அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் காலி செய்த டிடிவி.தினகரன்

விழுப்புரத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது….

தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கும், ஆளும் கட்சி பழனிச்சாமி கம்பெனிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

பழனிச்சாமி கம்பெனி காந்திநோட்டை நம்பியே நிற்கிறது. இந்தத்தொகுதியில் ஒருத்தர் தள்ளாடிக்கொண்டே வருவார். அவருக்கு ஏற்கனவே உடம்புவேற சரியில்லை. கோபம் உடம்புக்கு ஆகாது தம்பி. என்ன பேச்சு, என்னகோபம்?. நார்மலா கோபப்பட்டால் பரவாயில்லை. தள்ளாடிக்கொண்டே கோபப்படுவது என்ன நியாயம். அமைச்சராக இருந்து கொண்டு இப்படி கோபப்படுவதும், பேசுவதும் அசிங்கமாக இருக்கு. காந்திநோட்டை நம்பிதான் இந்ததேர்தலில் நிற்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிதானம், உத்தமர் எடப்பாடி உள்ளிட்டவர்கள் ஓட்டுக்கு பணத்தை கொடுத்தார்கள். ஆனால் மக்கள் அவர்களுக்கு பட்டை நாமம் போட்டு அனுப்பினார்கள். நாங்கள் பணத்துக்கு டோக்கன் கொடுத்ததாக கூறினார்கள்.

சசிகலா காலில் விழுந்து கிடந்த பழனிச்சாமியை 7 கோடி மக்களும் பார்த்தார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் எடப்பாடியும் அனைத்து அமைச்சர்களும் உள்ளேதான் போகப்போகிறார்கள்.

விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற ரூ.200 கோடியை இறக்கியிருக்கிறார்கள். ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 ஏன் ரூ.6 ஆயிரமும் கொடுப்பார்கள். இது உங்கள் பணம்தான், வாங்கிட்டுக் கதையை முடிச்சிடவேண்டும்.

இவ்வாறு தினகரன் பேசினார்.

Leave a Response