வலிமையான வேட்பாளர்களைக் களமிறக்கிய டிடிவி.தினகரன் – அதிமுக கலக்கம்

தமிழகத் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக தலைமையில் பெரும்பாலான கட்சிகள் இணைந்து பலமிக்க அணிகளாக எதிரெதிர் திசையில் நிற்கின்றன.

டிடிவி.தினகரனின் அமமுக சிறு சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

அதில்…

அமமுக பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அமமுகவின் முதற்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள்.

1. ராசிபுரம் (தனி) – எஸ்.அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமமுக துணைத் தலைவர்.

2. பாப்பிரெட்டிப்பட்டி – பி.பழனியப்பன், முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர்.

3. பாபநாசம் – எம்.ரெங்கசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.

4. சைதாப்பேட்டை – ஜி.செந்தமிழன் முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்.

5. ஸ்ரீரங்கம் – ஆர்.மனோகரன் முன்னாள் அரசு கொறடா, பொருளாளர், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்.

6. மடத்துக்குளம் – சி.சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், அமமுக தலைமை நிலையச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர்

7. திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.கே.உமாதேவன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர்.

8. சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தேர்தல் பிரிவுச் செயலாளர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்.

9. வீரபாண்டி – வீரபாண்டி எஸ்.கே.செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்.

10. உசிலம்பட்டி – ஐ.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்

11. கோவை தெற்கு – ஆர்.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை, முன்னாள் சட்டப்பேரவஒ உறுப்பினர், அமைப்புச் செயலாளர், கோவை மேற்கு மாவட்டச் செயலாளர்

12 அரூர் – அரூர் ஆர்.ஆர்.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், ஆட்சிமன்ற குழுத் தலைவர்.

13 பொள்ளாச்சி – கே.சுகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்.

14 தருமபுரி – டி.கே.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்.

15 புவனகிரி – கே.எஸ்.கே.பாலமுருகன், அமைப்புச் செயலாளர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்.

இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்த முதற்கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருமே அந்தந்தத் தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் மேற்கண்ட தொகுதிகளில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் இதனால் அங்கெல்லாம் அதிமுகவினர் கலக்கம் அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response