பாகிஸ்தான் பிரதமரிடம் பணிந்த மோடி – மக்கள் விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முதலாக இலங்கை செல்ல உள்ள நிலையில், இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், இம்ரான்கானுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு முதல் முறையாக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாகச் செல்ல உள்ளார். அதற்கு இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியும், அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையையும் ரத்து செய்தது. காஷ்மீரில் மனித உரிமைகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் அரசு முறைப் பயணமாகச் சென்றார். அதற்கு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கோரியபோது பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் செல்கின்றனர். இந்தப் பயணத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளீயானதும், தனக்கு அனுமதி மறுத்த இம்ரான்கானுக்கு மோடி அனுமதி அளித்தது ஏன்? அவருக்குப் பணிந்து போனது ஏன்? என்கிற கேள்விகள் சமூகவலைதளங்களில் எதிரொலிக்கின்றன.

Leave a Response