ஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக

தந்தைபெரியார் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கொன்றில் திருமாவளவன் ஆற்றிய 40 நிமிட உரையில் துண்டு துண்டாகச் சில பகுதிகளை வெட்டி தொகுத்து வெளீயிட்டனர் பாஜகவினர். அஹோடு, திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டார் என்று சிக்கலையும் கிளப்பினர்

அவர் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது. உடனே,  சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை வைத்து அரசியல்ரீதியாக திருமாவளவனைத் தனிமைப்படுத்துவது அல்லது திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துவது என்பது பாஜகவின் திட்டம்.

என்வே இதை எல்லா மக்களிடமும் கொண்டுப்போய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காக குஷ்புவை வைத்து பேட்டி கொடுக்க வைத்தனர்.

தேர்தல் ஆயத்தங்களில் ஈடுபடுகிற நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் என்றால் திமுக உட்பட அனைவரும் திருமாவளவனைக் கழற்றி விடுவார்கள் என்பது பாஜகவின் கணக்கு.

இவ்விசயம் அறிந்ததும் சுணங்காமல் சுறுசுறுப்பாக அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டார் திருமாவளவன்.

மனுநீதியை விமர்சித்தது தவறா? மனுநீதியில் உள்ளது தவறா? என்கிற திசைக்கு விவாதத்தைத் திருப்பினார். 

அதோடு நில்லாமல் மனுநீதியைத் தடை செய் என்று போராட்டமும் அறிவித்தார்.

திமுக, காங்கிரசு, பொதுவுடைமைக்கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் உட்பட எல்லோரும் திருமாவளவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

மனுநூலில் பெண்கள் குறித்து இழிவாகச் சொல்லப்பட்ட கருத்துகள் பொதுவெளிக்கு வந்தன.

இதனால் பொதுமக்கள் மனுநூல் இவ்வளவு கேவலமானதா? என முகம் சுளிக்கத் தொடங்கினர்.

இதன்விளைவு, தீவிர இந்துத்துவ ஆட்கள் கூட மனுநூல் பற்றிய விவாதம் இப்போது எதற்கு? என்று பின்வாங்கினர்.  

திருமாவளவனின் போராட்டமும் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோரின் அறிக்கைகளும் சங்கிகளை வாயடைக்க வைத்துவிட்டன.

அதன் விளைவாக எந்த மனுநூலை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்த நினைத்தார்களோ? அந்த மனுநூலையே கைகழுவ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர் பாஜகவினர்.

தெளிவான அரசியல் புரிதலும் நீண்ட அனுபவமும் கொண்டவர் என்பதால் திருமாவளவன் ஏறி அடித்தார். பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் பொறிகலங்கி நிற்கின்றன.

– சாந்தன்

Leave a Response