இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

இத்தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 உறுப்பினர்களைப் பெற்று முதன்மை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மகிந்த ராஜபக்சே பிரதமராகிறார்.

இதற்கடுத்து ரணில் விக்கிரமசிங்க கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிரேமதாசாவின் மகன் சஜித்தின்
ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) வாக்குகளைப் பெற்று 54 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

இன்னொரு சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) வாக்குகளைப் பெற்று 3 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

தமிழ்ப்பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி – ITAK – 3,27,168 (2.82%) வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) வாக்குகளைப் பெற்று ஒரு இடம் கூடப் பிடிக்கவில்லை.தேசியப்பட்டியல் எனும் வசதி காரணமாக அக்கட்சிக்கு 1 இடம் கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமை என்று உரத்துப் பேசுகிற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) வாக்குகளைப் பெற்று 2 இடங்கள் கிடைத்துள்ளன.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இக்கட்சி அங்கம் வகித்தபோது விசுதலைப்புலிகளின் நேரடிப் பிரதிநிதி என்று சொல்லப்பட்டது. அப்படிப் பார்த்தால் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் முதன்முறை பாராளுமன்றம் செல்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வடமாகாண முதல்வராக இருந்த சி.விக்னேசுவரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு இடத்தை வென்றுள்ளது. அவர் பாராளுமன்ற உறுப்பினராகிறார்.

விடுதலைப்புலிகளுக்கு இரண்டகம் செய்த கருணா கட்சி ஓரிடம் பிடித்துள்ளது. அதன்மூலம் அவரும் பாராளுமன்ற உறுப்பினராகிறார்.

எப்போதும் சிங்களத் தலைமைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 2 இடங்களைப் பிடித்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவும் வென்றுள்ளார்.

தேசிய காங்கிரசுக் கட்சி ஓரிடமும் இடமும், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக் கட்சி ஓரிடமும், இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓரிடமும் பிடித்துள்ளது.

Leave a Response