சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் – விளைவு என்ன?

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31 ஆம் தேதி வரை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எப்போதும் போல செயல்பட்டு வந்தது.

இதனையடுத்து நேற்று மதியம் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று வணிக வளாகத்தை மூடச் சொல்லியுள்ளனர். அதன் பேரில் கடையை மூடிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் மாநகராட்சி அதிகாரிகள் சென்றபின் திறந்து வைத்தனர்.

தகவலறிந்த மாநகராட்சி மண்டல அதிகாரி மனோகரன் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சரவணாஸ்டோர்ஸ் வணிக வளாகத்துக்கு நேற்று இரவு 7 மணியளவில் சீல் வைத்தனர்.

அதோடு இந்த நடவடிக்கை மற்ற பெரிய கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு அறிவிப்பின் தீவிரத்தை மற்ற கடைக்காரர்கள் உணர்ந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response