எஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை

இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை 3 இலட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்களும், 4 இலட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகளும் என மொத்தம் 8 இலட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத இருக்கின்றனர்.

இதுதவிர 62 சிறைவாசி தேர்வர்களும் தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதற்கான தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்களும், 4 இலட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகளும் எழுதுகின்றனர். இதுதவிர 100 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 27 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 844 மாணவர்களும், 4 இலட்சத்து 70 ஆயிரத்து 155 மாணவிகளும், 7 திருநங்கைகளும் எழுத இருக்கின்றனர். இதுதவிர 144 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 4 ஆம் தேதி வெளியாகிறது.

ஆக மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை மாணவர்கள் மற்றும் சிறைவாசி தேர்வர்கள் என மொத்தம் 25 இலட்சத்து 87 ஆயிரத்து 790 பேர் எழுத உள்ளனர்.

அனைத்துத் தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதற்கான தேர்வு கட்டுப்பாட்டு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டு அறை தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். 9385494105, 9385494115, 9385494120 ஆகிய எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் தேர்வு அறையில் எப்படி இருக்க வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதனை மாணவ-மாணவிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.

Leave a Response