2020 – 21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை – 51 முக்கிய அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய செய்திருக்கிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

1. கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

2. இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

3, வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்றி செயல்படுத்தப்படும்

4 .தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

5. 20 இலட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

6 விவசாயிகளுக்கு 15 இலட்சம் கோடி கடன்

7 வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில் இயக்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக்க இலக்கு நிர்ணயம்.

8 விவசாயத்துறைக்கு ரூ.2.83 கோடி இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9 புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

10 கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11 முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும்.

12 தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

13 ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

14 பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15 அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

16 திறன் மேம்பாட்டிற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

17 உத்தரபிரதேசத்தில் காவல்துறை பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

18 ஜவுளித்துறைக்கு ரூ .1,480 கோடி ஒதுக்கீடு

19 அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படும்.

20 சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

21 தேசிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள கல்வி நிறுவனங்கள் இணையவழிக் கல்வியை நடத்தலாம்.

22. 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதைகள் மின் மயமாக்கப்படும்

23 சுற்றுலா தலங்களை இணைக்கம் வகையில் தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

24 அரசு – தனியார் பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம்.

25 பெங்களூருவில் ரூ.18,600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.

26 ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ப்படும்.

27 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு 22000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

28 2024க்குள் 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்

29 நாடு முழுவதும் தகவல் சேவை பூங்கா

30 தேசிய எரிவாயுக் குழாய் தட திட்டம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.

31 எரிவாயுக் குழாயை எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடங்கள் 16,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும்.

32 மின்சாரத்தைக் கணக்கெடுக்கும் மின் மீட்டர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.

33 தனியார் சார்பில் தகவல் மைய பூங்காக்கள் அமைக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

34 ஒரு இலட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இணைக்க நடவடிக்கை. அதன்படி, 1 இலட்சம் கிராமங்களுக்கு ஃபைபர் ஆப்டிகள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

35 நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேமிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.

36 ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்படும்.

37 இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

38 சுற்றுலா வளர்ச்சிக்காக மாநில அரசுகளுக்கு ரூ.2500 கோடி மானியம் வழங்கப்படும்

39 தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சுற்றுலாத் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

40 ராஞ்சியில் பழங்குடியினருக்கான அருங்காட்சியகம் அமைக்க முடிவு.

41. 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வதுஇடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

42 இந்தியாவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மேம்படுத்தப்படும்.

43 கலாச்சாரத் துறைக்கு ரூ. 3,150 கோடி ஒதுக்கீடு

44 நகரங்களில் காற்று மாசைக் கட்டுப்படுத்த ரூ.4,400 கோடி ஒதுக்கீடு

45 மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்த ஒரே முகமை அமைக்கப்படும்.

46 பெண்கள் மேம்பாட்டிற்கு 28600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

47 ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ 30,757 கோடி நிதி ஒதுக்கப்படும்.

48 லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு

49 வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு காப்பீடு ரூ.5 இலட்சமாக உயர்வு

50 ஏற்கனவே இருந்த ரூ.1 இலட்சம் காப்பீட்டை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அறிவிப்பு

51. ஜி 20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

Leave a Response