அதிமுக புகார் – சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு

தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த‌தாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்த போது…

அலிபாபாவும் 40 திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும் என்னும் படியாக தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை. ஆனால் 40 திருடர்கள் உள்ளனர் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு பற்றி அலிபாபாவும் 40 திருடர்களும் என விமர்சித்ததாக அதிமுக பிரமுகர் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில், தமிழக அரசு பற்றி அவதூறு பேசியதாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response