வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி – ஒப்புக்கொண்ட பாஜக காரர்

மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்‌ஷிஷ் சிங் விர்க் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அதில் அவர் பேசும்போது, ‘இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்வர்) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்தப் பொத்தானை வேண்டுமானாலும் அழுத்துங்கள். ஆனால் உங்கள் வாக்கு பா.ஜனதாவுக்குத்தான் விழும். அதற்கேற்றவாறு நாங்கள் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம்’ என்று கூறினார்.

இந்த காணொலிப் பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜன்னாயக் ஜன்டா கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்து உள்ளது. மேலும் மாநில காங்கிரசு முன்னாள் தலைவர் அசோக் தன்வரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரத்தைக் கையில் வைத்திருப்பதால்தான் பாஜக, மக்கள் விரோதச் செயல்களைத் துணிச்சலாகச் செய்துவருகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

Leave a Response