ஐட்ரோ கார்பனுக்கு எதிரான ட்விட்டர் பரப்புரை – அதிரும் இந்தியா

தமிழக அரசே! காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு. ஐட்ரோ கார்பன் திட்டத்தைத் தடை செய்து அரசாணை வெளியிடு!

இந்திய அரசே! காவிரி ஆணையத்திற்கு முழுநேரத் தலைவரையும் அலுவலர்களையும் அமர்த்திடு! மேக்கேத்தாட்டு அணைக்குக் கொடுத்த அனுமதியை இரத்து செய்!

காவிரி ஆணையமே! கர்நாடகம் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள காவிரி நீரைக் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடு!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக வலைத்தளங்களில் சூலை 2 காலை 8 மணி முதல் #StopHydrocarbonNotCauvery – சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கமும், வேதாந்தா – ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு இலட்சம் மின்னஞ்சல்கள் அனுப்பி எச்சரிக்கும் இயக்கமும் நடக்கிறது. அனைவரும் அதில் பங்கேற்று, நம் கோரிக்கையை உலகறியச் செய்யுங்கள்!

என்று காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

அதை ஏற்று ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் இணைய #StopHydrocarbonNotCauvery என்கிற குறியீட்டுச் சொல் இந்திய அளவில் டிரெண்டாகிவருகிறது.

இதனால் இந்திய அரசு அதிர்ந்து நிற்கிறது.

Leave a Response