அமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை

சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் தவறான தகவல்களைப் பதிந்தால் அவற்றின் கீழ் ‘தகவலைச் சரி பார்க்கவும்,’ என்ற அர்த்தத்தில் ஒரு இணைப்பை ட்விட்டர் சேர்க்கத் தொடங்கி இருக்கிறது. சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்களைப் பகிர்ந்து மக்களைத் தவறான வழியில் நடத்தும் முயற்சிகளைத் தடுப்பதற்கு ட்விட்டர் இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.

இதனால் அமெரிக்க அதிபரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார். தபால் வாக்குகள் பற்றி சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் பதிந்த ஒரு பதிவில் டிவிட்டர் இந்த இணைப்பைச் சேர்த்து விட்டது. அதாவது டிரம்ப் பொய்த் தகவலை பகிர்கிறார் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டுவிட்டது.

அந்த விஷயம் சர்ச்சையாகி விட்டது.இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ட்விட்டர் கருத்துரிமையை நசுக்க முயல்கிறது.தபால் வாக்குச் சீட்டு தொடர்பாக கூறிய கருத்துகளை, அதாவது தபால் வாக்குச்சீட்டில் மோசடிகள் நிகழும் என்று நான் கூறிய கருத்துகளை தவறான தகவல் என்று போலி செய்திகளை வழங்கும் நிறுவனங்களான சிஎன்என் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியதை அடிப்படையாக கொண்டு, ட்விட்டர் என் பதிவுகளை தவறானது என்று அடையாளப்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான விஷயங்களில் ட்விட்டர் தேவையில்லாமல் தலையிடுகிறது. ஒரு அதிபராக நான் அதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்

ஆனாலும் ட்விட்டர் தளம் அந்த இணைப்பை நீக்கவில்லை.

Leave a Response