டி.ஏ.வி பள்ளியில் நடந்த மாற்றம்!

 

தமிழ் தமிழ் என்று பேசினாலும் முழுக்க தமிழில் தான் நம் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருந்தாலும் , தனியார் பள்ளிகளில் உள்ள நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் இல்லாத நிலையில், பல தமிழ் இன உணர்வாளார்களும் தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கில வழிக் கல்வியில் இன்னும் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.
அதில் நானும் விதிவிலக்கல்ல

என் இரண்டாவது மகள் யாழினி 2009 தில் அவளுக்கு இரண்டரை வயது . அப்போது எனது தலைமையில் சென்னையில் நடந்த மாவீர்ர் தின நிகழ்வில் ” நான் எல் கே ஜில சேரணும் அதுக்கு முன்னாடி நான் எல் டி டி யில சேர்ந்திட்டேன் . ஏன்னா நான் ஒரு தமிழச்சி. எங்க தலைவர் பெயர் பிரபாகரன். வாழ்க தமிழ். வெல்க தமிழீழம் என புலிகள் சீருடையுடன் மேடையில் முழங்கியவள். 2012 ஆம் ஆண்டு சென்னை முகப்பேரில் நடந்த மாவீர்ர் தின நிகழ்வில், அய்யா காசி ஆனந்தனின் ஓணான்கள் ஊரில் கழுதைகளும் வித்துவான்களே என்ற நறுக்குக் கதை சொல்லி விளக்கமளித்தவள்.

பாப்பா.. ஆங்கில வழிக் கல்விக் கூட்த்தில் நீ வேறு வழியில்லாமல் படிக்கிறாய். அதனால் நீ தமிழை இன்னும் கவனமாக படிக்க வேண்டும். பள்ளியில் நீ ஆங்கிலத்தில் பேசினாலும், வீட்டில் முழுக்க தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்படுபவள் ,

யாழினி இப்போது சென்னை முகப்பேரில் உள்ள பிரபலமான டி எ வி மேல் நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த ஒரு மாத்த்திற்கு முன்பு,
அப்பா… எங்க பள்ளியில் தமிழ் ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப் பாடத்திற்கான குறிப்பை ஆங்கிலத்தில்தான் கொடுக்கிறார். இதற்கு முன் தமிழில்தான் கொடுத்தார்கள் .. மேலும் சக மாணவர்களுடன் பள்ளிக்கு வெளியிலும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று சொல்வதாக கூறினாள் எனக்கு இதை கேட்டு கோபம் வந்த்தோடு அன்று இரவு தூக்கமே வரவில்லை.

இது அநியாயம் . தமிழ் ஆசிரியர் தமிழில் பாடம் நடத்தினால் மட்டும் போதாது, அவர் கொடுத்தனுப்பும் வீட்டுக் குறிப்புகளையும் தமிழில் தான் கொடுக்க வேண்டும் என கேட்போம், கேட்டு ஒத்து வரவில்லையெனில் என்ன ஆனாலும் சரி, எதிர்த்து உடனடியாக போராட்டம் நட்த்துவது என முடிவு செய்து, பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து கேட்டேன்.

மேலும் தாய் மொழிக் கல்வியின் தேவையை எடுத்துரைத்தேன் 45 நிமிட பேச்சில், பேச்சின் நடுவே ” நடந்தது தவறுதான் ”என அவர் ஒத்துக் கொண்டார். இருந்தாலும் … அவர்கள் செய்ததன் பின் விழைவு நாளை என்னாகும் என்ற உள்ளூர உள்ள கோபத்துடன், ஏன் இப்படி செய்தீர்கள் என விடாப்பிடியாக அவரிடம் கேட்டேன்.

தமிழரல்லாதவர்களுக்கு தமிழ் ஆசிரியர் எழுதி விடுவது புரியவில்லையாம் அதனால் இப்படி செய்ய வேண்டியதாயிற்று என்றார்.

இதனை கேட்டு எனக்கும் இன்னும் கோபம் வந்து விட்டது. இருந்தாலும் நா அடக்கத்துடன் , நடந்தது தவறு என ஒத்துக் கொண்ட ஒரு நல்லவரிடம் நாம் புரியவைப்பது நம் கடமை என உணர்ந்து தொடர்ந்தேன்..

அம்மா.. இது தமிழ் நாடு சமச்சீர் கல்விப்படி ஒரு பாடம் தமிழில் படிப்பது கட்டாயம் என தெரிந்துதானே அவர் தமிழ் நாட்டில் படிக்க வைக்கிறார். அவருக்கு பிடிக்க வில்லையெனில் அவர் அவரோட மாநிலத்திற்கு போக வேண்டியதுதான் என்றேன்.

வெளியில் மாணவர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என ஏன் கூறினார்கள் என்று கேட்டதோடு, ஐந்து பாடத்தில் ஒரு பாடத்தை தவிர மீதி நான்கையும் ஆங்கில வழியில் ஒருவர் படித்து ஒரு மாணவரால், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து செல்லும்போதும் அவருக்கு சரியானபடி ஆங்கிலத்தில் பேச வரவில்லையென்றால் அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

அன்று ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரு மொழிப்பாடமாக மட்டும் ஆங்கிலத்தை படித்த என் தாத்தா, என் சித்தப்பா எல்லாம் அருமையாக ஆங்கிலத்தில் பேசியபோது இவர்கள் இரண்டு வயதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் தவிர அனைத்து பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்தும், ஆங்கிலம் சரியாக பேசவராது என நினைப்பது எப்படி சரி ?

அம்மா… மற்ற பள்ளிகள் நினைப்பது போல மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் நம் பிள்ளைகள் பெற வேண்டும் என்பது உங்களது முதல் நோக்கமா ?அல்லது மாநிலத்திலேயே எம் பள்ளி மாணவர்கள்தான் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார்கள் என்ற நிலையை உருவாக்குவதுதான் உங்களது முதல் நோக்கமா ?

உலகில் வறுமையில் வாடும் சோமாலியா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாட்டவர்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் பேசுகிறார்கள் இருந்தும் அவர்களின் கொடிய வறுமையிலிருந்து மீளவில்லை .இந்தியாவில் உள்ள மொழி அறியாமையால் ஆங்கிலத்தை தூக்கி பிடிக்கிறார்கள் பெரும் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் தமது தாய் மொழியில் படித்தவர்கள் . ஆங்கிலம் அறிவு அல்ல. நம் தமிழ் மொழியைவிட மதிப்பு குறைவான ஒரு மொழி. ஆங்கிலம் நம் மொழி அப்படிப்பட்டதா? என பேசினேன்

பதில் சொன்ன அவர், வெளியில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லையென்றதோடு , எங்கள் குடும்பம் தமிழ்க் குடும்பம். எங்களது உடன் பிறந்தவர்களெல்லாம் தமிழ் வழியில் படித்து இன்று பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று கூறியதோடு, நடந்தது தவறு ,இன்னும் பத்து நிமிடத்தில் நடக்க உள்ள ஆசிரியர்கள் சந்திப்பில் (டீச்சர்ஸ் மீட்டிங்கில்) நான் சொல்லி உடனடியாக நடைமுறைப்படுத்துகிறேன் என உறுதியளித்தார்.

இரண்டு நாள் கழித்து, அப்பா இங்க பாருங்க.. வீட்டுப் பாட குறிப்பேட்டில் நான்கு பாட குறிப்பு ஆங்கிலத்திலும் தமிழ் ஆசிரியர் குறிப்பு தமிழிலிலும் குறிப்பிட்டுள்ளதை பாருங்கள் என காட்டினாள் யாழினி

பாப்பா தமிழ் பாட நேரம் முழுக்க தமிழ்ல தாண்டா நீ பேசணும் என்றேன்.

மூன்று நாள் கழித்து அப்பா இன்னைக்கு… தமிழ் பாடம் நடக்கும் போது அந்த அழிப்பான கொஞ்சம் கொடுன்னு என் தோழி கிட்ட கேட்டேம்ப்பா.. அவளுக்கு அது புரியல ஏண்டி… நீ எத வச்சு அழிக்கிற… இரேசர் வச்சுன்னு அவ சொன்னா ..அது அழிக்கிறதுதான .. அதுதான் அழிப்பான்னு நா சொல்லிட்டேம்ப்பா என்றாள் .

அருமை அருமை பாப்பா என மகளை கொஞ்சினேன்.
வீட்டில முழுத்தமிழில் ஆங்கிலம், வட மொழி கலக்காது பேசுவது போலவே இதர பாட நேரங்களில் இரேசர் என்று நோட்புக் என்று சொல்லும் அனைத்தையும் தமிழ் பாட நேரம் வந்தவுடன் அழிப்பான், குறிப்பேடு, புத்தகம் என்றே சொல்லுடா என ஊக்கப்படுத்தினேன்.

பாப்பா என்ன வார்த்தைக்கு தமிழ்ல தெரியணுன்னாலும் அந்த பள்ளில உள்ளவங்க உங்கிட்டதான் வந்து கேப்பாங்க.. அதை விட பெரிது என்னடா இருக்கு நீ தாண்ட நம்ம தமிழல காப்பாத்தணும்.

அப்பா இதுக்கு தமிழ்ல என்ன அதுக்கு தமிழ்ல என்ன என்னிடம் கேட்டுகொண்டே இருப்பாள் அவள் கேட்பதில் எனக்கும் சில தெரியாதிருக்கும் . எனக்கு தெரியாததை  கி த பச்சையப்பன் அவர்களிடம் கேட்டுக் கொள் என அவரது கை பேசி எண்ணையும் கொடுத்துள்ளேன்

இப்படி கேட்டு கேட்டு தையலக கட்டிங் மாஸ்டருக்கு ”வெட்டுத்திரனர்” என அறிந்து ’’வெட்டுத்திரனர் அறை’’ என எழுதி வைத்து விட்டாள்

ஏற்கனவே இதுக்கு தமிழ்ல என்ன அதுக்கு தமிழ்ல என்ன என யாழினிடம் சக மாணவர்கள் கேட்பது வழக்கம்
நேற்று …அப்பா அப்பா என பெரு மகிழ்வோடு என்னை அழைத்தாள்.

எதோ தமிழ் சார்ந்து மகிழ்வான செய்தி எதுவும் பள்ளியில் நடந்து விட்டதா என நானும் ஆர்வமாக, என்னடா என்றேன்
அப்பா எங்க தமிழ் ஆசிரியர் முதல்ல ஹோம் ஒர்க்ங்கிறத குறிக்கும்படி H/W ன்னுதாம்பா எழுதுவாங்க இங்க பாருங்கப்பா வீட்டுப்பாடத்தை குறிக்கிற மாதிரி வீ.பா ன்னு எழுதி இருக்காங்க.. என்றாள்

இதைக் கேட்டு உண்மையிலேயே அப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் ஆர்வம் உள்ள ஒருவர்தான் என உணர்ந்தேன் என் மகள் படிக்கும் பள்ளி திருந்தியதாக அப்பாடா.. என நான் சற்று நிம்மதியடைந்தாலும் என்னால் முழு நிம்மதி அடைய முடியாது.

இன்னும் எத்தனை பள்ளிகளில் இது போன்ற கொடுமைகள் நடக்கிறதோ என எண்ணுகிறேன். உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது அதனை தட்டிக் கேளுங்கள் உதவிக்கு தேவைப்பட்டால் எங்களை அழையுங்கள்
என் தலைவன் பிரபாகரன் ஏகே 47 துப்பாக்கியை பிரித்தும், இன்னும் கன ரக வாகன்ங்களை பிரித்து போட்டு இதற்க்கெல்லாம் தமிழ் பெயர் வையுங்கள் என்றார். அதற்கான கையேடுகளை தமிழில் அச்சிட்டு கொடுத்தார் ஈழத்தில். அதே ஈழத்தில் முதன்முதலாக மருத்துவக் கல்வியை 150 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தி நடத்தினார்கள்

அதிகாரங்கள் நம் கையில் இல்லையென்று வருந்த தேவையில்லை நம்மை விட்டு பிரிந்த ஒன்றரை லட்சம் உயிர்கள் நமக்கு இன உணர்வையும் நம் தாய் தமிழ் மொழி உணர்வையும் முன்னை விட அதிகமாக உயிரூட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையான உண்மை
நம் உரிமை என்பது எது? என்பதை சுய நலம் கடந்து உணர்ந்து ஆங்காங்கு குறல் கொடுத்தால்.. வெற்றி பெருவது என் மகள் யாழினி மட்டுமல்ல அனைத்து தமிழ் பிள்ளைகளுமே
நன்றி.

இதை படித்த உங்களுக்கு மட்டுமல்ல எம் நியாமான கோரிக்கையை ஏற்று உடனே செயல்படுத்திய டி ஏ வி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும்.

– அதியமான். (தமிழர் முன்னேற்றக் கழகம்)
படத்தில் யாழினி, இளஞ்செழியன், அதியமான்

Leave a Response