பூரண மதுவிலக்கை அமல்படுத்தபட்டினிப்போராட்டம்

 

நவம்பர் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை             பட்டினிப்போராட்டம்(உண்ணாவிரதம்) காளப்பட்டி சாலையில் உள்ள நேருநகர் பேருந்துநிலையம் அருகில்  கொங்குநாடு ஜனநாயக கட்சியின்  சார்பில் நடைபெறுகிறது.

பட்டினிப்போராட்டத்திற்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ்தலைமை தாங்குகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு ஐயா  அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்கள்.

 • * கொங்கு இளைஞர்கள் பேரவை நிறுவனர் குமார ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.கௌமார மடலாயம்- குமர குருபரர் சுவாமிகள்கோரிக்கை வெற்றிபெற ஆசிர்வாத உரைவழங்குகிறார்.
 • * காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் மாலை 4 மணிக்கு நிறைவுரை ஆற்றி பழரசம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்கிறார்.

 உறுதிமொழி:

* பட்டினிப்போராட்டத்தின் முதல் நிகழ்வாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை மதுவின் தீமைகளை மக்களிடம் எடுத்துச்சென்று, கோரிக்கை வெற்றிபெறும் வரை ஜனநாயக வழியில் தொடர்ந்து போராட அனைவராலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 

    அஞ்சலி :-

 • * காலையில் மதுவால் மாண்டோருக்கு மற்றும் விபத்தில் பலியானோருக்கும்,அவர்கள் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தப்படுகிறது.

சர்வமத பிரார்த்தனை:–

*  மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நலம் பெறவும்,வளம் பெறவும் சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது.

பள்ளி மாணவ,மாணவர்களிடையே விழிப்புணர்வு போட்டிகள் :-

* மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கவிதை,கட்டுரை,ஓவியப்போட்டியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.அவர்களுடைய சிறந்த கவிதை,கட்டுரை,ஓவியங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.அவர்களுடைய படைப்புகள் பட்டினிப்போராட்டத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

 • * மதுவினால் 60-வகையான நோய்கள் ஏற்படுகின்றன.ஆண்மைக்குறைவு,விவாகரத்து,சாலை விபத்து,பாலியல் குற்றங்களுக்கு மது முக்கிய காரணமாக அமைகிறது.அண்ணல் காந்தி,காமராஜர்,விவேகானந்தர்,மூதறிஞர் ராஜாஜி,தந்தை பெரியார் என அனைத்து தலைவர்களும்,ஞானிகளும் மது வேண்டாம் என்று தீவிரப் பிரச்சாரம் செய்துள்ளனர்.
 • * 1948-ல் தமிழகத்தை ஆண்ட ஓமந்தூர்,ராமசாமி ரெட்டியார் மதுக்கடைகளைத் திறப்பதால் அரசுக்கு இலாபம் ஆண்டுக்கு ரூ.17 கோடி. ஆனால் ஏழை,எளிய மக்களுக்கு நஷ்டம் ரூ.70 கோடி என்றால், இன்று அரசின் வருமானத்தில் இலாபம் ரூ.21,600 கோடி,அப்படியென்றால் ஏழை,எளிய மக்களுக்கு உண்டாகும் நஷ்டத்தை எத்தனை கோடி என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
 • * உடல்,மன ஆரோக்கியத்தை விட அற்புதமான போதை என எதுவும் இல்லை.ஆனால் அரசு தன் வருமானத்திற்காக வயது வித்தியாசம் இல்லாமல் வீதிக்கு வீதி மதுவுக்கு அடிமையாளர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

    நீராதார மேம்பாடு :-

*  அதேபோல,காமராஜர் ஆட்சிக்காலத்திற்குப் பின்பு எவ்விதமான நீராதாரத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.பாண்டியாறு-புன்னம்புலா,அத்திக்கடவு-அவினாசி,ஆனைமலையாறு-நல்லாறு, மேட்டூர் உபரிநீர் ஆகிய திட்டங்கள் 50ஆண்டு காலமாக கிடப்பில்   போடப்பட்டுள்ளன.முறையான நீர் மேலாண்மை தமிழக அரசு செய்யத்தவறியதால் கோடை காலத்தில் வறட்சிநிவாரணமும்,மழைக்காலத்தில் வெள்ள நிவாரணமும் தமிழக அரசு வழங்கி வருகிறது.முறையான திட்டமிடுதலும்,வளர்ச்சிப்பணிகள் இல்லாத காரணத்தால் தமிழ்நாடு தொழிற்துறையிலும்,விவசாயத்தின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

மத்திய,மாநில அரசுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் கடிதம் :-

 • * தமிழக முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மதுவால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி கேரளாவைப்போல் தமிழகத்திலும் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு பூரண மதுவிலக்குக்கு குரல் கொடுக்க வேண்டுமென்று கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

* அதேபோல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் வரை தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அத்திக்கடவு – அவினாசி, பாண்டியாறு – புன்னம்புலா ஆகிய திட்டங்கள் நிறைவேற குரல் கொடுத்தார்கள்.ஆனால் இன்று மத்திய அரசு ஆட்சியில் இருக்கும் அவர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை.எனவே நரேந்திரமோடிக்கு தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீராதாரத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கொங்குநாடு ஜனநாயக கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

தொடரும் போராட்டம் :-

*  தமிழகத்தில் “குடிக்க நீர் வேண்டும்,குடி கெடுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும்” என்ற கொள்கையோடு துவங்கும்  கொங்குநாடு ஜனநாயக கட்சியின் பட்டினிப்போராட்டம் முதல் கட்டப்போராட்டம்.இப்போராட்டம் ஒன்றிய வாரியாக தொடரும். .தமிழக அரசு பூரணமதுவிலக்கை,நீராதாரத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் இந்தப்  போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்கும்.

   கொங்குநாடு ஜனநாயக கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்புகள் :

 • * கொங்குநாடு ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் விரும்பி இணைந்த வண்ணம் உள்ளனர்.நாகரீக அரசியலை விரும்புவோருக்கு நல்ல அரசியல் களமாக கொங்குநாடு ஜனநாயக கட்சி உள்ளது.இன,மத,மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்காகவும் போராடுகின்ற கட்சி. கொங்குநாடு ஜனநாயக கட்சி வரும் மார்ச் மாதம் முதல் இளைஞர்களுக்கான அரசியல் பயிற்சி வகுப்புகளை நடத்த கொங்குநாடு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

பட்டினிப்போராட்ட ஏற்பாடுகள் :- 

 • * உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 2000 பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பூரண மதுவிலக்கு வேண்டி கையெழுத்து பெறப்படுகிறது.அதில் 10,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதரவை பதிவு செய்ய உள்ளார்கள்.
 • * தமிழகத்தில் உள்ள திமுக,அதிமுகதவிர அனைத்துக் கட்சிகளும் பூரண மதுவிலக்குக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
 • * காந்திபுரத்தில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று கோவை விமான நிலையம் சித்ரா சந்திப்பு காளப்பட்டி சாலை நேருநகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெறுகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் :

மணிக்கவுண்டர்    – தலைவர்,கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை.   B.T.அரசகுமார் M.A  – நிறுவனத் தலைவர்,அகில இந்திய தேசிய

ஃபார்வர்டு        பிளாக்.

J.ராஜ்குமார்        – நிறுவனத் தலைவர்,தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி.

M.V.சேகர்          – தலைவர்,கோகுல மக்கள் கட்சி.

K.ராஜன்           – நிறுவனத் தலைவர்,அகில இந்திய வேளாளர்,பிள்ளைமார்,செங்குந்தர்,முதலியார் கூட்டமைப்பு.

பகவான் PT.பரமேஸ்வர முதலியார் – நிறுவனத் தலைவர்,திராவிட நெசவாளர் முன்னேற்றக் கழகம்.

முனுசாமி         – தலைவர்,கொங்கு தேச மக்கள் கட்சி.

ராமகோபாலதண்டாள்வார்  -மாநில  தலைவர்,உழவர் உழைப்பாளி கட்சி. N.S.பழனிசாமி      – கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்.

S.K.காந்தியவாதி சசிப்பெருமாள்  – தேசிய தலைவர், தேசிய மக்கள் கூட்டமைப்பு

K.தங்கவேலு      – மாநில செயலாளர்,காந்திய மக்கள் கட்சி.

நல்லசாமி        – தலைவர்,கள் இயக்கம்.

கொங்கு ராஜாமணி – தலைவர்,தீரன் சின்னமலை பேரவை.

சமூக சேவகர் வீரா.சிதம்பரம் M.A – நிறுவனர் & தலைவர் இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி.

C.கிருஷ்ணன்      – தலைவர்,தொழிலாளர் கட்சி

சின்னையன்      – காங்கிரஸ் மாவட்ட தலைவர்

R.R.மோகன் குமார்  – மதிமுக மாவட்ட தலைவர் உள்ளிட்ட

தலைவர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள்,

எழுத்தாளர்கள்,சமுதாயத்தலைவர்கள்,ரோட்டரி மற்றும் மகளிர் அமைப்புகள் ஆகியோர்  பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு வழங்க உள்ளார்கள்.

 •  

  Leave a Response