தஞ்சையில் மலையாள அதிகாரியால் புறக்கணிக்கப்படும் தமிழ்க்கலைகள்.

தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் தமிழ்க் கலைகள், கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து ஆளுநர், முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தஞ்சையில்  நடைபெற்ற தென்னகப் பண்பாட்டு மைய பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் தென்னகப் பண்பாட்டு மையம் தனது எல்லைக்குட்பட்ட மாநிலங்களின் பாரம்பரியக் கலைகளை வளர்க்க வேண்டும். கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

தஞ்சையில் அமைந்துள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் தற்போதைய இயக்குநரும், அதற்கு முன்பிருந்தவர்களும் மையத்தின் உயரிய நோக்கை செயல்படுத்தவில்லை. மையத் துக்கு ஐஏஎஸ் அலுவலரையே இயக்குநராக நியமிக்க வேண்டும். ஆனால், தற்போது ஓய்வுபெற்ற அலுவலரை சிறப்பு அதிகாரம் கொடுத்து இயக்குநராக நியமித் துள்ளனர். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். மற்ற மாநில கலைஞர் களுக்கு கலைநிகழ்ச்சி வழங்கும் போது, கேரள கலைக் குழுவின ருக்கே நிகழ்ச்சிகள் அளிக்கப்படு வதாக புகார்கள் வருகின்றன.

புதுச்சேரிக்கு கண்காட்சிக்கு அனுப்பப்பட்ட விலைமதிப்பற்ற 58 ஓவியங்களில் 30 ஓவியங்கள் விற்றதுபோக மீதமுள்ள ஓவியங் களின் கதி என்னவென்று தெரிய வில்லை. மேடை, ஒலி, ஒளி அமைத் தல், விளம்பரம், உணவு உள்ளிட்ட வற்றுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும்போது முறைகேடுகள் நடப்பதாகவும் அறியப்படுகிறது.

மேலும், மற்ற மாநிலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் செலவுகள் இருவேறாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதுகுறித்து தணிக்கையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் உரிய நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை.

மத்திய அரசு ஒதுக்கும் நிதி, செலவு செய்யப்படும் பணம் மக்களின் வரிப் பணம் ஆகும். இது, தனி மனித ஆடம்பரத்துக்கும், ஊழலுக்கும் பயன்படுகிறது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்தக் குழு அமைக்கவும், தமிழ்நாட்டின் கலை களுக்கும், நலிவுற்ற கலைஞர் களுக்கும் முக்கியத்துவம் அளிக்கவும் கோரி அனைத்துக் கட்சியினர் ஆதரவுடன் ஜூன் 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது. மேலும், மையத்தின் தலைவரும் தமிழக ஆளுநருமான ரோசய்யா, தமிழக முதல்வர், மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோருக்கு மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம், தமிழத் தேசியப் பேரியக்க தலைமைக் குழு உறுப் பினர் பழ.ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் ச.சிமியோன்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ) மக்கள் விடுதலை தலைமைக் குழு உறுப்பினர் இரா.அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Response