இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 215 பேருக்கு மேல் உயிரிழந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் நீர்கொழும்பு, மட்டகளப்பு ஆகிய பகுதிகளில் கிறிஸ்துவ தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாளில் திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து 10 நாட்களுக்கு முன்பாகவே இலங்கை காவல்துறைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இலங்கை அரசு தவறியுள்ளது.

ஈழத் தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களையும் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் இப்போது கிறிஸ்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியுள்ளனா் என்ற ஐயப்பாடு எழுகிறது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அக்குடும்பத்தினருக்கு நிதிகள் மற்றும் உதவிகள் செய்ய சிங்கள அரசு முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response