திருமாவளவனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நூதன சதி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவருக்காக திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருமாவளவன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர பாராளுமன்றத்தில் வலியுறுத்துவது,

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை,

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவது,

தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்,

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு,

இந்திய மொழிகள் நல அமைச்சகம்,

வறுமைக்கோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவது,

நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வலியுறுத்துவது,

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம்,

தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி,

ஜிஎஸ்டி ஒழிப்பு,

விவசாயக் கடன்கள் இரத்து,

பொதுத்துறை நிறுவனங்களைக் காக்க நடவடிக்கை,

சுங்கக் கட்டண நடைமுறையை இரத்து செய்வது,

நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு,

அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையை சட்டமாக்குவது,

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்தல்,

தமிழை ஆட்சி மொழியாக்குவது,

தமிழகத்திற்கு தனிக்கொடி உரிமை,

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது,

மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவது,

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது

உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவனுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறதாம் பாஜக. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவர் பாராளுமன்றத்துக்குள் செல்லக்கூடாது என்று நினைக்கிறதாம்.

இதனால் மிகத்தந்திரமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களைக் களமிறக்கியிருக்கிறார்களாம். அவர்கள் தொகுதி முழுதும் இறங்கி மக்களை அணுகி பணப்பட்டுவாடா செய்வதோடு திருமாவளவன் இந்துக்களுக்கும் இந்து கடவுள்களுக்கும் விரோதி எனவே அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பரப்புரை செய்துவருகிறார்களாம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்த திருமாவளவனுக்கு கோயில் தீட்சிதர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு கோயில் நடைமுறைப்படி, சட்டையைக் கழற்றிவிட்டு சித்சபைக்கு சென்ற அவர், நடராசரையும் தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள பொது தீட்சிதர்கள் நிர்வாக அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்த திருமாவளவன், அங்கிருந்த தீட்சிதர்களிடம் உரையாடி வாக்குக் கேட்டார்.

இச்சம்பவத்தின் போது நெற்றி நிறைய விபூதியுடன் திருமாவளவன் இருந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் ஆர்.எஸ்.எஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இவரை இந்துக்கடவுள்களின் விரோதி என்று நாம் சொல்லும் நேரத்தில் இப்படி நெற்றியில் திருநீறுடன் காட்சியளிக்கிறாரே என்கிற அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Leave a Response