மும்பை அணி வெற்றி – சென்னை ரசிகர்கள் சோகம்

ஐபிஎல் 12 – மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 15 ஆவது லீக் போட்டி
ஏப்ரல் 3 இரவு எட்டுமணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியில் வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Leave a Response