2019 நாடாளுமன்றத் தேர்தல் – விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தக்கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அதன்படி…

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதில் தொல்.திருமாவளவன் தனி சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response