
2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக பாஜக பாமக ஆகியன கூட்டணி அமைத்துள்ளன.
இந்தக்கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,அதிமுக தலைமை அலுவலகத்தில்,எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும். அதிமுகவுடனான கூட்டணியில் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி.
தேர்தலில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் என்.ஆர் காங். போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.


