விஜயகாந்த் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதிமுக-பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிகவில் விருப்பமனு விநியோகம் என்று அறிவித்திருக்கிறது.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,

இன்று (பிப்ரவரி 22,2019) காலை 10.45 மணி அளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

நேற்று (பிப்ரவரி 21,2019) காங்கிரசு மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்தித்திருக்கிறார்.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரைச் சந்தித்ததாக ரஜினி சொன்னாலும் இது தேர்தல்நேரம் என்பதால் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Response