பாமகவின் 10 நிபந்தனைகளும் மக்கள் கேட்கும் 4 கேள்விகளும்

2019 நாடாளூமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது பாமக.

திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை எனத் தொடர்ந்து விமர்சித்து வந்த பாமக திடீரென அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாசு,கூட்டணிக்காக நாங்கள் அதிமுகவுக்கு பத்து நிபந்தனைகள் விதித்துள்ளோம் என்றார்.

1.டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய பிராந்தியமாக அறிவிக்க வேண்டும்,

2.மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,

3.மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,

4.ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,

5.மணல் குவாரிகளை மூட வேண்டும்,

6.அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

7. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு,

8. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கிய பயிர்க்கடன்களை ரத்து செய்தல்

9.காவேரி பாசனம் வேளாண் திட்டம் குறித்த கோரிக்கை,

10.கோதாவரி காவேரி இணைப்பு திட்டம்

போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளதாக பாமக கூறியுள்ளது.

இவற்றில் ஏழு தமிழர் விடுதலை உட்பட பெரும்பாலான கோரிக்கைகள் மாநில அரசே நிறைவேற்றக்கூடியது.

மாநிலத்தில் இப்போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கிறது. அப்படியானால் அந்தக் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுமா? என்கிற கேள்வியோடு,

மீதியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் அதிகாரத்தில் உள்ள பாஜகவோடும் தான் பாமக கூட்டு சேர்ந்துள்ளது.

எனவே அந்தக் கோரிக்கைகளும் உடனே நிறைவேற்றப்படுமா? என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

உடனே என்றால் எப்போது? தேர்தலுக்கு முன்பா? பின்பா?

பின்பு செய்யமுடியும் என்றால் முன்பே ஏன் செய்ய முடியாது? என்கிற கேள்விகளும் பாமகவினரை நோக்கிக் கேட்கின்றனர். பதில் சொல்லத்தான் ஆளில்லை.

Leave a Response