திமுக காங்கிரசு தொகுதிப் பங்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் – தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்று மாலை தமிழக காங்கிரசு மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் சென்னை வந்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரசு நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அறிவாலயம் வந்த அவர்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அவை எந்த தொகுதிகள் என்பது பிற கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response