தேர்தல் கூட்டணி – பாமகவின் நிலை சரியா?

2019 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரசு, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக பாமக தேமுதிக புதியதமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் பாமக மட்டும் இரண்டு அணிகளோடும் ஒரே நேரத்தில் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதிமுக அணியில் 7 தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கும் பாமக, திமுக அணி என்றால் ஐந்து தொகுதிகள் கேட்பதாகத் தகவல்.

இவற்றில் அதிமுக அணியில் தொகுதிகள் ஒதுக்கீடு மட்டுமின்றி பெரும்தொகை பணம் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறதாம்.

இதனால் பாமக என்ன முடிவு எடுக்கும் என்று தெரியாமல் இருக்கிறது என்கிறார்கள்.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு அணிகளோடும் பாமக பேசி வருவதற்கு கடும் விமர்சனங்கள் வருகின்றன.

தமிழகத்தின் முக்கியச் சிக்கல்களில் எல்லாம் உடனுக்குடன் வினையாற்றும் தலைவராக மருத்துவர் இராமதாசு இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி பணம் பதவிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அழகில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Leave a Response