மோடி பெயர் சொன்னதும் பொங்கியெழுந்த மக்கள் – பொன்.ராதாகிருஷ்ணன் பேரரதிர்ச்சி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் நடத்திய இளையராஜா 75 விழாவில், 2 வது நாளான பிப்ரவரி 3 அன்று ரஜினி, கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இளையராஜாவைப் பாராட்டிப் பேசினார்கள்.

விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

ஒரு ரசிகனாக இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தினேன். இதயங்களில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் இது. சென்ற ஆண்டு பிரதமர் மோடி பத்மவிபூஷன் விருது வழங்கி தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். இளையராஜா ஆன்மீக ரீதியாகவும் தர்மத்தின் ரீதியாகவும் வாழ்ந்து வருபவர்.
தெய்வமான மூன்று தேவியரும் இருக்ககூடிய மாமனிதன் தமிழகத்திற்கு கிடைத்த மகா பாக்கியம். அவரது பாதத்தினை தொட்டு வணங்கிய போது மூவரின் ஆசியும் கிட்டியதாக எண்ணினேன் என்றார்.

அவர் பேசும்போது பிரதமர் மோடி என்று சொன்னதும் அரங்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓ வென்று கத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைக் கண்ணுற்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேரரதிர்ச்சி அடைந்தார்.

மோடி மீது மக்கள் எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது மிகச் சிறந்த சான்று என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.

Leave a Response