
மோடி தமிழ்நாட்டுக்கு வருவது அரசியல் பிரச்சாரத்துக்கு அல்ல, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட. தமிழ்நாட்டுக்கு நல்லதொரு திட்டத்தைத் துவக்கி வைக்க வருகிறவரை திரும்பிப்போ என்று சொல்லலாமா?
நாட்டின் பல மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதாக மோடி அரசு அறிவித்தது 2014இல்
தமிழ்நாட்டில் எங்கே அமைக்கலாம் என்று பலவிதமான ஆலோசனைகள் நடந்தன. 2015 இல் மத்தியக் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்து ஆய்வு செய்தது.
அப்புறம் அதில் எந்த சத்தமும் காணோம்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் என்னவாயிற்று என்று பாஸ்கரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தின் ஏ.செல்வம், என் ஆதிநாதன் ஆகிய இரண்டு நீதிபதிகளும், இந்த வழக்கில் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீண்டும் 2017 இல் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிமன்ற அவமதிப்புக்காக மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினஆர் ரமேஷ்.
அந்த வழக்கின்மீது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா இருவரும் 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடத்தை அறிவிக்குமாறு உத்தரவிட்டனர்.
ஆரம்பத்தில் பெருந்துறை, செங்கல்பட்டு, தொப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.
பொருத்தமான இடங்களை தமிழக அரசு மத்திய அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறியது மத்திய அரசு.
ஐந்து இடங்களை மத்திய அரசுக்குத் தெரிவித்து விட்டோம் என்று பதிலளித்தது தமிழக அரசு.
ஆக, தமிழக அரசு இடங்களைத் தெரிவு செய்து தெரிவித்த பிறகும், முடிவு செய்யாமல் இழுத்தது மோடியின் மத்திய அரசு, நீதிமன்றத்தில் பொய்யும் சொன்னது.
பிறகு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் வழங்குமாறு 2018 நவமபர் 8ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறது நீதிமன்றம்.
அதற்குப் பிறகுதான் மதுரை தோப்பூரில் மருத்துவமனை அமையவிருக்கிறது என்று அறிவித்தது. மத்திய அரசு.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காமல் இருந்திருந்தால், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு போடாமல் இருந்திருந்தால் பிம்பிலிக்கி பிலாப்பிதான்.
2014 இலிலிருந்து 2019 வரை ஐந்தாண்டுகள் இழுத்தடித்து டேக்கா கொடுக்கப் பார்த்ததால்தான் – #GoBackModi
முடிவு செய்யப்பட்ட 15 மாதங்களுக்குள் எய்ம்ஸ் வந்து விடும் என்கிறார்கள்.
2014 இல் அறிவிக்கப்பட்டு, பல இடங்களில் பணிகள் துவக்கப்பட்டும் இதுவரை எங்கும் ஒரு எய்ம்ஸ்கூட துவக்கப்படவில்லை என்பதே உண்மை. எல்லாமே வெற்று வேட்டு. அதனால்தான் – #GoBackModi
– எம்.ஏ.கே.ஜெய்லானி


