கொடநாடு பற்றிப் பேசியவர்களுக்கு வந்தது ஆபத்து

மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, தனக்கும் கோடநாடு விவகாரத்திற்கு சம்பந்தமில்லை என தெரிவித்தார்.

அத்துடன் தன் மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவதூறு பரப்ப சிலர் பின்புலத்தில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்படை அமைத்து விசாரிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதற்கிடையே கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்றுள்ளது. மேத்யூஸ் உள்ளிட்டோரை கைது செய்ய அவர்கள் விரைந்துள்ளனர்.

அத்துடன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் ரவியை கைது செய்யவும் மற்றொரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response