மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் இன்று காலமானார்.உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சென்னை அமைந்தகரை இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது.
நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியை சேர்ந்த இவர், நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தார். இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் பொருளாளரும் இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றில்…
சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை
தொல்காப்பியக் களஞ்சியம்
கவிதை கிழக்கும் மேற்கும்
அற்றையநாள் காதலும் வீரமும்
தமிழரின் தாயகம்
தமிழ்ச் சமுதாய வரலாறு
தமிழ் மக்கள் வரலாறு
ஆகியன முதன்மையானவை.
இவர் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார். கடந்த 1986ம் ஆண்டில் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதும் பெற்றுள்ளார்.
இவர் ஆசிரியராக இருந்து
அறிவியல் தமிழியம்
தேடல்
முடியும்
கொங்கு
ஆகிய இதழ்களையும் வெளியிட்டு உள்ளார்.
இவர் மறைவு தமிழ்ச்சமூகத்துக்குப் பேரிழப்பு.