
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆகஸ்ட் 3 அன்று நெல்லையில் உள்ள தனது வீட்டில் பிரம்மாண்டமான விருந்து அளித்தார். இந்த விருந்து, தேர்தல் பரப்புரைக்ககாக நெல்லை சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன என்று சொல்லப்படுகிறது.இந்த விருந்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விருந்துக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு, பாஜக-அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு, பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இரு கட்சிகளின் உறவை பலப்படுத்துவதற்கான அரசியல் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
இதில் பாஜகவைச் சேர்ந்த, சுதாகர் ரெட்டி, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விருந்து பாஜ்க கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விருந்தைக் காரணமாக வைத்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரானவர்களை நயினார் நாகேந்திரன் ஒருங்கிணைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே அண்ணாமலைக்கு எதிராகப் பல நகர்வுகளைச் செய்துவருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நயினார் நாகேந்திரனின் நான்கு கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திடம் மாட்டியதன் பின்னணியில் அண்ணாமலைதான் இருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் நம்புகிறாராம்.
தன்னை மாட்டிவிட்ட அண்ணாமலையை அரசியலிலிருந்தே அகற்றத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலைக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.அதன் வெளிப்பாடு எடப்பாடி பழனிச்சாமியை சாக்காக வைத்து நடந்த விருந்தில் வெளிப்பட்டது என்று தநா பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நெருப்பில்லாமல் புகையாதே.


