காங்கிரசுடன் இணக்கம் இல்லை ஒன்றிய அரசிடம் சமரசமில்லை – திமுக அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இதையொட்டி,நேற்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பாமஉக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாள்ர்களிடம் கூறியதாவது….

தென்மாநிலங்களுக்கு பிரச்சனை வரக்கூடிய வகையில் தொகுதி மறுவரையறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக கடுமையாக எதிர்க்கும்.அதேபோன்று தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு தொகுதிகளை அதிகப்படுத்தினால் தென்மாநிலங்களில் குரல் முழுமையாக அடிப்பட்டுப்போகும்.குறிப்பாக குடியரசுத்தலைவர் தேர்தல்,குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடந்தால் தென்மாநிலங்களின் குரல் மிகவும் நசுங்கிவிடும்.மக்கள்தொகை கணக்கு அடிப்படையில் தொகுதிகளை அதிகரிக்க அனுமதிக்கமாட்டோம்
மேலும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் எந்த ஒரு கூட்டத்திலும் திமுகவினர் கலந்துகொள்ள மாட்டோம். அதேபோன்று காங்கிரசு ஒருங்கிணைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் திமுக கலந்து கொள்ளாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் டி.ஆர்​.​பாலு கூறிய​தாவது….

நாடாளு​மன்​றத் தொகு​தி​களை மறு​வரையறை செய்​வது எந்த அடிப்​படை​யில் அமையப்போகிறது என்​பது குறித்த அதி​காரப்​பூர்​வ​மான எந்​தவொரு தகவலை​யும் ஒன்றியஅரசு இது​வரை எதிர்க்​கட்​சிகளுக்கு வழங்​க​வில்​லை.தொகு​திகளின் எண்​ணிக்​கையை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக ஊடகங்​களில்
வெளி​யாகும் செய்​தி​கள் யாவும் அனு​மானங்​களின் அடிப்​படையி​லானவை;அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல.

அரசு சொல்​லாதவரை​யில் நாங்​கள் முடிவு எடுக்கமுடி​யாது.அதே​நேரத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் ஆணைக்கு இணங்க மேகே​தாட்டு அணை விவ​காரம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் திமுக
உறுப்​பினர்​கள் குரல் எழுப்​பு​வார்​கள்.

இதற்​கான நாடாளு​மன்ற ஒத்​திவைப்​புத் தீர்​மான நோட்​டீஸ் முறைப்​படி வழங்​கப்​பட்​டு​விட்​டது.அவை​யில் இதுகுறித்து பேசுவதற்கு அனு​மதி கோரு​வோம்.அவைத்தலை​வர்​கள் அனு​மதி மறுத்​தா​லும்,தொடர்ந்து வற்​புறுத்தி இப்​பிரச்​சினையை எழுப்​புவோம்.

காவிரி நடு​வர் மன்ற இறு​தித்தீர்ப்பு வந்த பின்​பும் கூட,தமிழகத்​துக்​குத் தண்​ணீர் திறந்​து​விடு​வதற்கு
ஒவ்​வொருமுறை​யும் கர்​நாடக அரசின் அனு​ம​தியை எதிர்​பார்க்க வேண்​டிய நிலை நீடிக்​கிறது.காவிரி மேலாண்​மைக் குழு கூடி முடி​வெடுத்​தா​லும் கர்​நாடகம் சரிவரத் தண்​ணீர் திறப்​ப​தில்​லை.

எனவே,கர்​நாடக அரசு மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதைத் தடுக்க தனி​யாக ஒரு நடு​வர்மன்​றம்
அமைக்கவேண்​டும் என்​பது குறித்​தும் நாடாளு​மன்​றத்​தில் வலி​யுறுத்​திப் பேசுவோம்.உடனடி​யாக பெண்​கள்
இடஒதுக்​கீடு மசோதா கொண்​டுவர வேண்​டும் என தெரி​வித்​திருக்​கிறோம்.

நாடாளு​மன்​றத்​தின் மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் திமுக உறுப்​பினர்​கள் மற்​றும் காங்​கிரசு உறுப்​பினர்​கள் தனித்​தனி​யாக அமரு​வதற்​கான அதி​காரப்​பூர்வ இருக்கை ஒதுக்​கீட்டு விவரங்​கள் நேற்று (நேற்று முன்​தினம்)
அதி​காலை​தான் வந்து சேர்ந்​தன.இதற்​கான கோரிக்​கையை ஒரு மாதத்​துக்கு முன்பே நாங்​கள் சமர்ப்​பித்​திருந்​தோம்.

மாநிலசுயாட்​சி,தென்மாநிலங்​களின் நாடாளு​மன்​றப் பிர​தி​நி​தித்​துவ உரிமை,காவிரி விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் மற்​றும் கல்வி உரிமை ஆகிய எதி​லுமே திமுக ஒரு​போதும் சமரசம் செய்​து​கொள்​ளாது.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Leave a Response