திருப்பூர் மக்களின் கோரிக்கை தொடர்வண்டி அமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய சத்யபாமா எம்.பி

திருப்பூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான தொடர்வண்டி நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் – திருப்பூரில் தொடர்வண்டிகள் நின்று செல்லுதல் தொடர்பாக 21.12.2018 அன்று மத்திய
தொடர்வண்டித் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம்
திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா கோரிக்கைமனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில்…

திருப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவேண்டும் என்ற திருப்பூர் தொகுதி மக்களின் கோரிக்கையை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மிகப்பெரிய நகரமாக உருவெடுத்துவரும் திருப்பூர், அரசு கருவூலத்துக்கு உரிய நிதிப்பங்களிப்பை தருவதோடு ஜவுளித்துறை மற்றும் பின்னலாடைத் தொழில் துறை சார்ந்து பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

திருப்பூரில் ஏ பிரிவு ரயில் நிலையம் அமைந்துள்ளதோடு தென்னக ரயில்வேயின் சேலம் மண்டலத்துக்கு பெரும் வருவாயையும் ஈட்டித்தந்து வருகிறது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட வசதிகளையும் பயணிகளின் நலனுக்காக வழங்கவேண்டியது அவசரத் தேவையாகும்.

1. முழுவதும் வேயப்பட்ட கூரையுடன் கூடுதல் நடைமேடை.

2. கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்டர்.

3. எல் இ டி திரை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் வருவது மற்றும் செல்வது குறித்த டிஜிட்டல் வசதிகள்.

4. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் கார் வசதி.

5. ரயில் பற்றிய தகவல்களை வழங்கும் உதவி மையம் மற்றும் தானியங்கி கியோஸ்க் வசதி.

6. ரொக்கப்பண ஏடிஎம் வசதி.

7. குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்
ஆவண செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

கடிதம் 2

பொருள்: திருப்பூர் தொகுதி மக்களின் ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள்:

திருப்பூரில் கீழ்க்கண்ட ஏழு ரயில்வண்டிகள் நின்று செல்லவேண்டும் என்ற எனது திருப்பூர் தொகுதி மக்களின் கோரிக்கையை தங்களின் கவனத்துக்கு கொண்டுவரவிரும்புகிறேன்.

1. ரயில் வண்டி எண்கள் 22877/22878 ஹெளரா-எர்ணாகுளம் அந்த்யோத்யா எக்ஸ்பிரஸ்.

2. ரயில் வண்டி எண்கள் 22837/22838 ஹட்டியா-எர்ணாகுளம் ஏசி எக்ஸ்பிரஸ்.

3. ரயில் வண்டி எண்கள் 12660/12659 ஷாலிமார் நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ்

4. ரயில் வண்டி எண்கள் 12623/12624 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில்.

5. ரயில் வண்டி எண்கள் 12697/12698 சென்னை திருவனந்தபுரம்- சென்னை மெயில் வாராந்திரி.

6. ரயில் வண்டி எண்கள் 22207/22208 சென்னை திருவனந்தபுரம் -சென்னை சூப்பர் ஏசி.

7. ரயில் வண்டி எண்கள் 12237/12258 யெஷ்வந்த்புர் கொச்சுவேலி – யெஷ்வந்த்புர் கரீப்ரத் எக்ஸ்பிரஸ்.

ஏ கிரேடு ரயில் நிலையமாக விளங்கும் திருப்பூர் தென்னக ரயில்வேயின் சேலம் மண்டலத்துக்கு பெரும் வருவாயை ஈட்டித் தந்துவருகிறது.

இந்த ரயில் வண்டிகள் திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் திருப்பூருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்புக்காக புலம் பெயரும் லட்சக்கணக்கான ஜவுளித்துறை பணியாளர்களுக்கு பயன் விளையும் என்றும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

திருப்பூர் தொகுதி எம்.பி என்ற முறையில் தொகுதி மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response