இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து பழ.நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை…

இலங்கையில் குடியரசுத் தலைவர் சிறீசேனா அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து சனநாயகப் படுகொலை செய்திருக்கிறார். தன்னால் நியமிக்கப்பட்ட இராசபக்சேவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை உணர்ந்ததாலேயே இவ்வாறு செய்திருப்பது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். ஏற்கெனவே அழிவுக்குள்ளாகித் தவிக்கும்
ஈழத் தமிழர்கள் மேலும் பேரழிவுக்குள்ளாவார்கள் என்பதில் ஐயமில்லை.

இராசீவ் காந்தியின் காலத்திலிருந்து மோடி காலம் வரை இலங்கையைப் பொறுத்த இந்திய அரசின் கொள்கை என்பது அப்பட்டமான தோல்வியடைந்துவிட்டது என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு சனநாயகத்தை மீட்கவும்,
ஈழத் தமிழர்களைக் காக்கவும் முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response