சர்கார் விவகாரம் பெரிதாக்கப்படுவது இதனால்தான்

சர்கார் படத்துக்கெதிராக அதிமுக போராட்டம், சர்கார் படத்தை அதிமுக எதிர்ப்பதற்கு கமல், ரஜினி கண்டனம்.

சர்கார் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கி மறுதணிக்கை என இன்று முழுக்க சர்கார் படம் பற்றிய செய்திகளே ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இவை அனைத்தும் பாஜக அரசால் திட்டமிட்டு உருவாக்குவதாகச் சொல்கின்றனர்.

நவம்பர் 8, 2026 அன்று ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை செல்லாதென அடாவடியாக அறிவித்தார் மோடி.

அதனால் மக்கள் தாங்கொணாத்துன்பங்களை அனுபவித்தனர். பலர் மடிந்தனர்.

அந்த அறிவிப்பு வெளியாகி இரண்டாண்டுகளானதை நினைவூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது காங்கிரசு கட்சி.

அது பெரிய செய்தியாகிவிடக்கூடாது என்பதற்காகவே சர்கார் சர்ச்சைகளை பாஜகவின் பின்புலத்தில் இயக்குபவர்கள் பெரிதாக்குகிறார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response