திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் 14 கோரிக்கை – சத்யபாமா எம்.பி நன்முயற்சி

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் மொத்த ஏற்றுமதி 11,295 கோடி.இது இந்திய ஏற்றுமதி அளவில் சுமார் 47.04% பங்களிக்கிறது.

டையிங், பிரிண்டிங், பின்னலாடை என 8350 யூனிட்கள் திருப்பூரில் அமைந்துள்ளது. TEA(Tiruppur Exporters Association) உள்ள 1036 அங்கத்தினரில் 80% குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களே ஆகும்.

இந்நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருப்பூர் எம்.பி சத்தியபாமா மத்திய விவசாயத்துறை மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகள்:

1)உலக வணிக அமைப்பில் (WTO) நடப்பில் உள்ள MEIS [Merchandise Export From India Scheme] திட்டத்திற்கு பதிலாக மாற்றுத் திட்டம் வேண்டி வலியுறுத்தல்.

2)அயல்நாடுகளின் தீவிர போட்டியால் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு ‘ட்யூட்டி ட்ராபேக்’ 5% உயர்த்தி வழங்கல்

3)ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு 3.5% – 1.7% ஆக குறைக்கப்பட்ட ROSL விகிதத்தை 3% ஆக அதிகரித்தல்.

4)ஏற்றுமதி கடனுக்கான மானியத் தொகையை 3-5% ஆக உயர்த்துதல்.

5)FTA (Free Trade Agreement) வாயிலாக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு வழிவகுத்தல்.

6)வங்கிகள் வாராக்கடனுக்காக அளிக்கப்படும் காலக்கெடுவை,குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக நீடித்தல்.

7)அதிகரித்து வரும் அந்நிய இறக்குமதியால் அவதியுறும் தொழில்துறையை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தில்.

8)Advance authorisation scheme எனப்படும் திட்டத்தின் கீழ் இறக்கமதியாளர்களுக்க,ஐ.ஜி.எஸ்.டி தொகையை திரும்பத் தருதல்

9)ஜி.எஸ்.டி தொகையை திரும்பப் பெற EGM-மை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தல்

10)ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை மூலம் பின்னலாடைத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துதல்.

11)பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல்.

12)வேற்று மாநிலங்களிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீடு/விடுதி அமைத்துத் தருதல்.

13)கோவை விமான வழித்தடத்தை விரிவுபடுத்தல் மற்றும் பன்னாட்டு விமான முனையம் அமைத்தல்.

14)கோவை விமான நிலையத்தில் சரக்கு சேவை முனையம் அமைத்தல்

ஆகிய கோரிக்கைகளை மத்திய அமைச்சர் அவர்களிடம் முன்வைத்துள்ளார்.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மேம்படுத்த சத்யபாமா எடுத்த இந்த முயற்சியை தொழில்நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

Leave a Response