கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிவணக்க நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
அதிகாலை முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், இந்திய ஒன்றியம் முழுவதிலுமிருந்து வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் மலர்வணக்கம் செய்தனர்.
தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களும் வந்திருந்து வணக்கம் செலுத்தினர்.
ஆனால். நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவில்லை என்பதுபோல் பேச்சு இருக்கிறது.
உண்மையில் சீமான் வந்திருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குநர் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உட்பட பலர் சேர்ந்து வந்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி வந்து போன பிறகு காவல்துறையின் நெகிழ்வுத்தன்மையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருவர் மரணம், பலர் படுகாயமடைந்த அந்த நேரத்தில் வந்து கூட்ட நெரிசலில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
கூட்டத்தில் பாரதிராஜாவைப் பாதுகாப்பதே பெரிய வேலையாகிவிட்டதாம்.
ஆனாலும் விடாமல் உள்ளே சென்று கலைஞர் உடலுக்கு மாலை வைத்துவிட்டு பின்னால் இருந்த மு.க.அழகிரி,ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட பலரோடும் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.