கலைஞர் நினைவிடத்தில் இப்படி செய்வதா? வைரமுத்துவை வறுத்தெடுக்கும் இணையம்

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நல்லடக்கம், அரசு மரியாதையுடன் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தது.

இன்று காலை நல்லடக்கம் நடந்த இடத்துக்கு தன் மகன்களோடு வந்தார் கவிஞர் வைரமுத்து.

அவர் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் தெளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வைரமுத்து பேசினார். அப்போது கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும் கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை என்று தெரிவித்த வைரமுத்து, தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி செல்வதாகவும் சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு என்றும் கூறினார்.

இந்நிகழ்வு கடும் விமர்சனத்துக்கு உட்பட்டிருக்கிறது.

காலமெல்லாம் பகுத்தறிவு பேசிய தலைவருக்கு அவருடைய குடும்பத்தினரே எவ்வித சடங்கும் செய்யாத போது, வைரமுத்து எப்படி இதைச் செய்யலாம்? என்கிற கேள்வி பல திசைகளிலிருந்தும் எழுகிறது.

வைரமுத்து நீங்கள் உண்மையிலேயே
கலைஞரை நேசித்திருந்தால் இப்படி கொச்சைப்படுத்தியிருக்கமாட்டீர்கள்.
உன்னோடு வாழ்ந்த அந்த மனிதரின் நம்பிக்கையும் கொள்கையும் உனக்கு முக்கியமில்லையா வைரமுத்து? என்று அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response