கருணாநிதி உடல்நலம் விசாரித்தார் சீமான்

கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியா முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள் பார்த்து வருகின்றனர். இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், பாஜகவின் முரளிதர் ராவ், தமிழிசை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார்.

சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்; முகம் தெரியாத நபரின் பதிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம் இவ்வாறு அவர் கூறினார்

Leave a Response