
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் சீனியர் 6 சீஸனின் இறுதிப்போட்டி,ஜூலை 15 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மொத்தம் 22 போட்டியாளர்கள் கலந்துகொண்ட ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த், ரக்ஷிதா, ஷக்தி, செந்தில் கணேஷ், அனிருத், மாளவிகா ஆகிய 6 பேரும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில், ஒவ்வொருவரும் இரண்டு பாடல்கள் பாடினர்.
அதில், ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார். ரக்ஷிதா இரண்டாமிடமும், மாளவிகா மூன்றாமிடமும் பெற்றனர்.
பட்டம் வென்ற செந்தில் கணேஷுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பை செந்தில் கணேஷ் பெற்றார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து செந்தில்கணேஷுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
மண்ணின் இசைக்குப் பெருமை, முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் பட்டம் வென்ற தமிழன் எனபது உட்படப் பலவாறாகப் பாராட்டுகின்றனர்.
